'கங்குவா' படம் பற்றி எல்லாரும் சொல்றதை பார்த்தா.. வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள ‘கங்குவா’ கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இருக்க போகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் ‘கங்குவா’ படம் திரையுலக பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

சிறுத்தை சிவா கார்த்திக்கை வைத்து ஏற்கனவே படம் இயக்கி இருந்தாலும், தற்போது தான் முதன்முறையாக ‘கங்குவா’ மூலம் சூர்யாவும் கைகோர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற சிறுத்தை சிவா, தனது பாணியில் இருந்து முழுவதுமாக விலகி ‘கங்குவா’ படத்தினை இயக்கி வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த வந்த சிவா, தற்போது வரலாற்று ஜானரை கையில் எடுத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடித்து வருகிறார் சூர்யா. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யா கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கங்குவா’ படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ‘கங்குவா’ படம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. அது என்னவென்றால், ‘கங்குவா’ படத்துடைய இரண்டு சீன்களை பார்த்தேன். வேறலெவலில் இருந்தது. சிறுத்தை சிவா வெறித்தனமான முறையில் இயக்கு வருகிறார். சூர்யாவும் அதற்காக உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக ‘கங்குவா’ இருக்கும் என தெரிவித்துள்ளார்.

என்னம்மா இருக்காரு.. ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா செய்துள்ள காரியம்: மிரளும் பேன்ஸ்.!

தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள இந்த அப்டேட் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. ‘கங்குவா’ படம் குறித்து தொடர்ச்சியாக பலரும் இதே போல் அதிரடி அப்டேட்டை கூறி வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ‘கங்குவா’ படத்தில் வரலாற்று சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்காக உடல் எடையை அதிகரித்து வெறித்தனமான லுக்கில் வலம் வருகிறார் சூர்யா.

அவரின் மிரட்டலான லுக் தொடர்பான போட்டோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. சரித்திர பின்னணியில் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது ‘கங்குவா’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் ‘கங்குவா’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kanguva: ‘கங்குவா’ லுக்கில் மிரள வைக்கும் சூர்யா: தொடரும் சஸ்பென்ஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.