ஜெயலலிதா பேர சொல்லமாட்டீங்களா? – வம்பில் மாட்டிய சென்னை மெட்ரோ.. இபிஎஸ் எச்சரிக்கை!

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. அத்துடன், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்று பெயர் மாற்றப்பட்டது. அதே போல

சென்ட்ரல் மெட்ரோ என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும், கோயம்பேடு மெட்ரோவுக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா சிஎம்பிடி மெட்ரோ என்றும் பெயர் மாற்றம் செய்து அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மெட்ரோ விரிவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் மெட்ரோ பணிகள்

இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து தனது தலைமையிலான அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால், மெட்ரோ நிறுவனம் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்து வருகிறது. கடந்த வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது – தமிழக அரசு சூட்டிய “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.

ஜெயலலிதா பெயர் இருட்டடிப்பு ?

ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று அறிவிப்பு செய்யாமல், “புறநகர் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது.

மதுரையில் ரயில் விபத்து – 9 பேர் பலி

தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்

மேலும், பழையபடி புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் விடியா திமுக. அரசையும் வலியுறுத்துகிறேன்.

அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து அவரின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அதிமுக சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் பல இடங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது என இதற்கு பதிலளிக்கிறார்கள் திமுகவினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.