தங்கமகன் நீரஜின் கிரீடத்தில் மற்றுமொரு மயிலிறகு! உலக தடகள தங்கம் வென்ற சோப்ரா

புடாபெஸ்ட்: இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம் வென்று தங்க மகன் நீரஜ் சோப்ரா சாதனை செய்துள்ளார். உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் (budapest) நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துக் கொண்டார்.

Javelin thrower Neeraj Chopra wins India’s first gold medal at World Athletics Championship 2023; throws 88.17 metres in his second attempt. pic.twitter.com/XWHUGb9TTU

— ANI (@ANI) August 27, 2023

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவின் அபாரமான ஆட்டம் தொடர்கிறது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி வீசிய நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம், இந்த ஆண்டு நடைபெறும் உலக தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

உலக தடகளத்தில் இரு பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளார் நீரஜ் சோப்ரா. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகளப்போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நீரஜ் சோப்ராவைத் தவிர, இந்தியாவின் கிஷோர் 5வது இடமும், மானு 6வது இடமும் பிடித்தனர். பாகிஸ்தான் வீரர் நதீம் வெள்ளி வென்றார். செக் குடியரசை சேர்ந்த ஜாகுப் வெண்கல பதக்கம்வென்றார்.

இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா இதுவரை சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு பெற்ற பதக்கங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும் என்று அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா இதுவரை வென்ற தங்க பதக்கங்களின் பட்டியல் 

ஒலிம்பிக் 2020
உலக தடகளம் 2023
டைமண்ட் லீக் 2022
ஆசிய விளையாட்டு 2018
காமன்வெல்த் 2018
ஆசிய சாம்பியன்ஷிப் 2017
தெற்கு ஆசிய விளையாட்டு 2016

இதற்கு முன்னதாக, காயம் காரணமாக ஒரு மாதம் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா மீண்டு வந்து, டயமண்ட் லீக் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்,  இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் தங்கங்களை பரிசளித்துவரும் வீரருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.