"பெண்கள் ஊர் சுற்ற வேண்டிய அவசியமில்லை".. தலிபான் போட்ட அதிரடி தடை.. இதுக்கு ஜெயிலிலேயே அடைச்சிடலாம்

காபூல்:
கல்வி, வேலைவாய்ப்பு என அடுத்தடுத்து பெண்களுக்கு பல்வேறு தடைகளை போட்டு வரும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள், தற்போது பெண்கள் தேசிய பூங்காவுக்கு செல்லவும் தடை விதித்திருக்கின்றனர். பெண்கள் அப்படி ஒன்றும் வெளி இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டில் பிற்போக்கு சித்தாந்தத்தை கொண்ட அரசு அமைந்தால் அங்கு என்ன விபரீதம் எல்லாம் நடக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தானே சிறந்த உதாரணம்.

அமெரிக்க படைகள் வெளியேறி ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்தது முதலாக பல முட்டாள்தனமான உத்தரவுகள் அங்கு பிறப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக, பெண்களை குறிவைத்து பல அடக்குமுறைகள் அங்கு அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

பெண்கள் கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது; வேலைக்கு செல்லக்கூடாது; ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெறக் கூடாது; பயணம் செய்யும் போது குடும்பத்தில் உள்ள யாராவது ஒரு ஆண் உடன் இருக்க வேண்டும்; ஓட்டல்களுக்கு செல்லக்கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தலிபான்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியுள்ளது.

இந்தியாவிற்கு வருகை தரும் சவுதி இளவரசர்.. அடுத்தக்கட்டத்திற்கு போகும் இந்தியா – சவுதி உறவு!

இந்நிலையில், ரூம் போட்டு யோசிப்பதை போல மற்றொரு கட்டுப்பாட்டை தலிபான்கள் இன்று அறிவித்துள்ளனர். அதாவது, ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப் பிரபலமான பண்ட் – இ – அமீர் தேசிய பூங்காவிற்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் முகமது காலிப் அனாஃபி கூறுகையில், “பண்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்கு வரும் பெண்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை. அதனால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.