சைலண்டாக காய் நகர்த்தும் விஜயண்ணா: வெற்றிமாறனுடன் நடந்த மீட்டிங்.!

லியோ, தளபதி 68 படங்கள் என பயங்கர பிசியாக இருக்கிறார் விஜய். அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள ‘லியோ’ படத்திற்காக பயங்கரமான எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையில் விஜய்யின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் ‘வாரிசு’ ரிலீசுக்கு பிறகு லியோவில் நடித்து முடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

லியோவை தொடர்ந்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார் வெங்கட் பிரபு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் விஜய் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகனுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

‘லியோ’ பட ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த தகவலும் இணையத்தில் கசிந்து விடக்கூடாது என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். ஆனாலும் அவ்வப்போது இந்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. இதனிடையில் தான் தற்போது விஜய்யின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

‘லியோ’ படம் குறித்து நடிகை கிரண் சொன்ன விஷயம்: செம்ம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்.!

அது என்னவென்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், நடிகர் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் அடிக்கடி இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்து பேசியுள்ளதாகவும், இது விஜய் படம் குறித்த பேச்சு வார்த்தையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அண்மை காலங்களாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதுக்குறித்து வெற்றிமாறனும் சில பேட்டிகளில் பேசி வருகிறார். ‘விடுதலை 1’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப்படத்தை சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையில் தற்போது விஜய்யின் மேனேஜர் வெற்றிமாறனை சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

‘தளபதி 68’ படத்தில் இணையும் ‘பீஸ்ட்’ பட நடிகை: பெருசா பிளான் போடும் வெங்கட் பிரபு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.