நாத்திகனா.. இதுக்கெல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்லை… திருப்பதி தேவஸ்தான புதிய தலைவர் ஆவேசம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளை தலைவராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஒய்.வி. சுப்பாரெட்டியின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவியில்புதிய தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் பூமனா கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டார்.

அவர் கடந்த 10 ஆம் பதவியேற்ற நிலையில் 24 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பூமனா கருணாகர் ரெட்டியின் நியமனத்திற்கும், அறங்காவலர் குழுவில் ஊழல் வழக்கில் கைதான கேதன் தேசாய் மற்றும் சரத் சந்திர ரெட்டி ஆகியோர் இடம்பெற்றிருப்பதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேவஸ்தான தலைவரும் திருப்பதி தொகுதி எம்எல்ஏவுமான பூமனா கருணாகர் ரெட்டி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, பூமனா கருணாகர் ரெட்டி, 17 ஆண்டுகளுக்கு முன்பு தான் டிடிடி தலைவராக ஆனதை நினைவுபடுத்தி பேசினார்.

எல்லா விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டிதான் தான் இந்த அளவுக்கு வந்திருப்பதாகவும், விமர்சனங்களுக்கு அஞ்சும் ஆள் தான் இல்லை என்றும் கூறினார். மதமாற்றத்தை தடுக்கும் வகையில் 30000 திருமணங்களை நடத்தி வைத்ததை நினைவு கூர்ந்த பூமனா ரெட்டி, 17 ஆண்டுகளுக்கு முன்பு டிடிடி தலைவராக 17 ஆண்டுகளுக்கு முன்பு டிடிடி தலைவராக நான் பணியாற்றிய போது, திருமலையின் புனிதத்தை பாதுகாக்கவும் இந்து மதத்தை பாதுகாக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவித்தார்.

நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் காலணிகள் அணிவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தான் மேற்கொண்டதாகவும் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்தார். அன்னம்மாச்சாரியாவின் 600வது பிறந்தநாள் விழாவை நடத்தியது, தலித் கிராமங்களில் ஸ்ரீவாரி கல்யாணம் நடத்தப்பட்டதையும் கூறிய பூமனா கருணாகர் ரெட்டி, தன்னை கிறிஸ்தவர் என்றும், நாத்திகர் என்றும் குற்றம் சாட்டுபவர்களுக்கு இதுவே தனது பதில் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.

திருப்பதியில் மீண்டும் தொடங்கும் சேவைகள்… அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!

குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நற்காரியங்களை செய்வதை நிறுத்துபவன் தான் அல்ல என்றும் தன்னுடைய நற்பணி தொடரும் என்றும் கூறினார். பூமனா கருணாகர் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். சிறுவயதிலிருந்தே முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ந்து பல போராட்டங்களில் சிறைக்கு சென்றுள்ளார்.சிறையில் ஒய்.எஸ். ராஜ சேகர ரெட்டியை சிறையில் சந்தித்த பிறகு ஒய்எஸ்ஆர் குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வருகிறார் பூமனா கருணாகர் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.