ஷிவமொகா:ஷிவமொகாவில் விமான நிலையம் திறக்கப்பட்டு ஆறு மாதத்துக்கு பின், நாளை பெங்களூருக்கு முதல் விமானம் இயக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம், ஷிவமொகா புறநகர் பகுதியின் சோகனே என்ற இடத்தில், 449 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை, ஆறு மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆனால், சில பணிகள் முடிவடைய வேண்டி இருந்ததால், விமான சேவை துவங்கவில்லை.
இந்நிலையில், கனரக மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஷிவமொகா விமான நிலையம், நாளை முதல் விமான சேவையை துவங்குகிறது.
பெங்களூரில் நாளை காலை 9:50 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு, 11:05 மணிக்கு ஷிவமொகா சென்றடையும். பின், 11:25 மணிக்கு ஷிவமொகாவில் இருந்து புறப்பட்டு மதியம் 12:25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.
ஷிவமொகாவில் இருந்து மற்ற பயணியருடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஷிவமொகா எம்.பி., ராகவேந்திரா, நான், மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மது பங்காரப்பா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பயணிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement