காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை கடந்த மாதம் பீகார் மாநிலம், பாட்னாவில் சந்தித்து அவர் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போது, பீகாரின் சிறப்பு உணவான `Champaran Mutton’-ஐ லாலுவுடன் சேர்ந்து ராகுல் காந்தி சமைத்து, ருசித்தார். இந்த உணவு தயாரிப்பின்போது இரு தலைவர்களும் உணவு மற்றும் அரசியல் குறித்த உரையாடலை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சந்திப்பு கடந்த மாதம் 4-ம் தேதி நடைபெற்றிருக்கிறது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “லாலுஜி இதில் (சமைப்பதில்) கைதேர்ந்தவர், அவரிடமிருந்து நானும் இதைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” எனக் கூறும் ராகுல், “நீங்கள் இதில் எல்லாவற்றையும் கலக்குகிறீர்களா… இதற்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?” என்று லாலுவிடம் கேட்கிறார். அதற்கு அவர், “இந்தக் கலவை என்பது இல்லாமல், அரசியலும் சாத்தியமில்லை” என்கிறார்.
மேலும், லாலு தனக்கு தாய்லாந்து உணவுகள் பிடித்தமானது என்கிறார். அதற்கு ராகுல், “எனது சகோதரி பிரியங்கா காந்தி தாய்லாந்து உணவுகளைச் சமைப்பார். அப்போது உங்களுக்குக் கொடுத்து அனுப்புகிறேன்” என்கிறார். மேலும், “இந்த உணவை நான் என்னுடைய சகோதரிக்குச் சிறிதளவு எடுத்துச் செல்கிறேன். அவர் வரும்போது உணவு கொண்டுவருமாறு என்னிடம் கூறியிருந்தார். அதனால், நான் இதை எடுத்துச் செல்லாவிட்டால், சிக்கலாகிவிடும்” என்கிறார் ராகுல்.
लोकप्रिय नेता, लालू जी से उनकी सीक्रेट रेसिपी और ‘राजनीतिक मसाले’ पर दिलचस्प बातचीत हुई।
ग़रीबों, वंचितों, अल्पसंख्यकों और महिलाओं के लिए INDIA की सोच एक है – समानता, प्रगति और सशक्तिकरण।
लालू जी से मेरी ख़ास मुलाक़ात का पूरा वीडियो यूट्यूब पर देखें: https://t.co/5RbVDqVfY0 pic.twitter.com/59jekdEBgQ
— Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2023
அதைத் தொடர்ந்து, “பா.ஜ.க வெறுப்பைப் பரப்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ராகுல் கேட்க, “பா.ஜ.க-வின் அரசியல் பசி என்றுமே தீருவதில்லை…” என லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார். நேற்று மாலை ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, காங்கிரஸ் கட்சியினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY