வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்,-இந்தியாவுக்கு உயர் தொழில்நுட்பங்கள், சாதனங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், இரண்டு முக்கிய எம்.பி.,க்கள் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், சபையின் இந்தியக் குழுவின் துணைத் தலைவர் ஆன்டி பிரார் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவுக்கு தொழில்நுட்ப ஏற்றுமதி சட்டம் என்ற பெயரிலான இந்த மசோதா விரைவில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
இந்த மசோதாவில் மிக உயர்தொழில்நுட்பங்கள் மற்றும் அது சார்ந்த சாதனங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்கும்படி கூறப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக திறனுள்ள கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement