வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரபாட்: மொரோக்கோவில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் , 300 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இடிபாடுபாடுகளில் சிக்கி, 300 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement