தமிழ்க் குடிமகன் (தமிழ்)

எசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி செப்டம்பர் 7ம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சேரன் அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், அவரைச் சாவுச்சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கிறார்கள். சாதிய ரீதியிலான குலத்தொழிலை செய்ய மறுக்கும் சேரனுக்கு, அந்த ஊர்காரர்களால் ஏற்படும் பிரச்னைகள், ஒடுக்கு முறைகள் எனக் கிராமங்களில் நடக்கும் தீண்டமையையும், சாதிய அரசியலையும் மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம்.
ஜவான் (இந்தி/தமிழ்/தெலுங்கு)

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. கார்ப்பரேட் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக நாயகன் களமிறங்கும் ஆக்ஷன், திரில்லர் நிறைந்த திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ராணுவ வீரரான அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க சிறையில் இருக்கும் பெண்கள் படையுடன் களமிறங்கும் `ஜெயிலர்’ மகனின் கதையே இந்த `ஜவான்’ (Jawan).
அங்காரகன் (தமிழ்)

மோகன் டச்சு இயக்கத்தில் சத்யராஜ், ஸ்ரீபதி, நியா சங்கரத்தில், அப்பு குட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’. திரில்லர், ஹாரர் திரைப்படமான இது செப்டம்பர் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மர்மங்கள் நிறைந்த பழைய ரெசார்ட் ஒன்றில் மர்மமான முறையில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதை விசாரிக்க காவல் அதிகாரியாகக் களமிறங்கும் சத்தியராஜ், அந்த மர்மங்களையும், கொலைக்கானக் காரணத்தையும் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.
துடிக்கும் கரங்கள் (தமிழ்)

வேலு தாஸ் இயக்கத்தில் விமல், சதிஷ், சங்கிலி முருகன், மிஷா நரங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துடிக்கும் கரங்கள்’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னை வந்திறங்கும் வயதான இஸ்லாமியர் ஒருவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விலையுயர்ந்த வண்டி ஒன்றில் ஐ.ஜியின் மகள் சடலமாக மீட்கப்படுகிறார். விமல் மற்றும் அவரது நண்பரான சதிஷ் இருவரும் இணைந்து மகனைத் தேடி அலையும் சங்கிலி முருகனுக்கு உதவி செய்கிறார்கள். சங்கிலி முருகனின் மகன் கண்டுபிடிக்கப்பட்டாரா, ஐ.ஜி மகள் கொலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதே இதன் கதைக்களம்.
ரெட் சாண்டல் வுட் (Red Sandal Wood) (தமிழ்)

குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, எம் எஸ் பாஸ்கர், தியா மயூரி, கேஜிஎஃப் ராம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘Red Sandal Wood’. திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பகுதியில் செம்மரம் கடத்தலில் தவறுதலாக மாட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.
நூடுல்ஸ் (தமிழ்)

மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன், எஸ்.ஜே.ஆழிவா, ஷீலா ராஜ்குமார், மதன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் உத்தமன் அவரது குடும்பத்தினருடன் அவரின் வீட்டில் மாடியில் சத்தம்போட்டு குழந்தைகளுடன் விளையாடுகிறார். அதனால் அக்கம் பக்கத்து வீட்டினர் காவலர் ஒருவரிடம் இது குறித்து கூறுகின்றனர். இதைக் கேட்க வரும் காவல் அதிகாரிக்கும் ஹரிஷ் உத்தமனுக்கு தகராறு ஏற்படுக்கிறது.
ஒரு காவல் அதிகாரியைப் பகைத்துக் கொண்ட ஹரிஷ் உத்தமனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல பிரச்னைகள் வருகிறது. இப்பிரச்னைகளை அவர்கள் சமாளித்தார்களா, அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம்.
ஸ்ட்ரைக்கர் (தமிழ்)

எஸ்.ஏ.பிரபு இயக்கத்தில் ஜஸ்டின் விஜய் ஆர், வித்யா பிரதீப், ராபர்ட் நாத், கஸ்தூரி சங்கர், அபிநயா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்ட்ரைக்கர்’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி (வியாழக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒரு கார் விபத்தால் இறந்த பெண்ணின் ஆன்மா, பேயாகச் சுற்றிப் பலரின் உடலில் தொற்றிக் கொள்கிறது. இதைத் தடுக்க கதாநாயகனும் அவரது நண்பர்களும் போராடுகின்றனர். அப்பேயுடன் பேசி அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஸ்ட்ரைக்கர் வைத்து கேரம் விளையாடுவதே வழியாக இருக்கிறது. இவர்களின் இந்த முயற்சி சாத்தியமானதா, இதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.
பரிவர்த்தனை (தமிழ்)

சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர், மோஹித், ஸ்மேஹா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரிவர்த்தனை’. காதல் திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி (வியாழக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்து கொண்ட காதலனைத் தேடி வரும் பெண்ணிற்கும் திருமணமான காதலனுக்கும், அவரது மனைவிக்கும் இடையில் நடக்கும் உரையாடல்தான் இதன் கதைக்களம்.
Miss Shetty Mr Polishetty (தெலுங்கு)

மகேஷ் பாபு இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, நவீன் பாலிஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Miss Shetty Mr Polishetty’. காதல், காமெடி திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி (வியாழக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வாழ்வில் நடந்த பிரச்னைகளால் ஆண்களை வெறுக்கும் அனுஷ்கா, யாருமின்றி தனிமையில் வாழ்கிறார். ஒருகட்டத்தில் தனக்கு குழந்தை ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுக்கிறார். அதற்காகத் தனக்குப் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார். இதற்கிடையில் அனுஷ்காவின் வாழ்வில் வரும் ஸ்டேண்டப் காமெடியனயாக இருக்கும் கதாநாயகன், அனுஷ்காவிற்குப் பிடித்தப்படி இருக்கிறாரா, அனுஷ்கா அவரை ஏற்றுக் கொண்டாரா என்பதுதான் இதன் கதைக்களம்.
The Nun II (ஆங்கிலம்)

மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் டைசா ஃபார்மிகா, ஜோனாஸ் ப்ளோகெட், போனி ஆரோன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் ‘The Nun II’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முந்தய ‘தி நன்’ திரைப்படத்தின் தொடர்ச்சிதான் இப்படம். சர்ச்சில் சுற்றி வரும் நன் பேயைக் கட்டுபடுத்த அதனை முந்தைய பாகத்தில் கட்டுபடுத்தியே அதே சிஸ்டர் ஐரீன் வரவழைப்படுகிறார். அவர் அந்த நன் பேயைக் கட்டுப்படுத்தி விரட்டி அடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Haddi (இந்தி) – ZEE5

அக்ஷத் அஜய் சர்மா இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப், முகமது ஜீஷன் அய்யூப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Haddi’. திருநங்கை ஒருவர் தன் வாழ்வில் நடந்த அநீதிகளுக்காக ஒரு கிரிமினல் கும்பலை எதிர்த்துப் போராடி, பழிவாங்குவதுதான் இதன் கதைக்களம். க்ரைம், திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 7ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வார வெப்சீரிஸ்கள்
I Am Groot S2 (English) – Hotstar

மார்வெல் தயாரிப்பில் கிர்ஸ்டன் லெபோர் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள அனிமேஷன் வெப்சீரிஸ் ‘I Am Groot S2’. ‘I Am Groot’ சீசனின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் ‘Groot’-ன் சேட்டைகளையும், ஜாலியான பயணத்தையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஜாலியான இந்த வெப்சீரிஸ் செப்டம்பர் 6ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Top Boy S3 (English) – Netflix

ரோனன் பென்னட் படைப்பாக்கத்தில் உருவாகியுள்ள ‘Top Boy’ தொடரின் கடைசி சீசன் இது. ஆஷ்லே வால்டர்ஸ் மற்றும் கேன் ராபின்சன் மற்றும் சுல்லி, சிம்பியாடு அஜிகாவோ உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த வெப்சீரிஸ் செப்டம்பர் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kung Fu Panda: The Dragon Knight S3 (English) – Netflix

மிட்ச் வாட்சன் மற்றும் பீட்டர் ஹேஸ்டிங்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பாண்டாவின் ஜாலியான அலப்பறைகள்தான் இந்த ‘Kung Fu Panda: The Dragon Knight’. இந்த அனிமேஷன் வெப்சீரிஸின் சீசன் 3 செப்டம்பர் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Virgin River S5: Part 1 (ஆங்கிலம்) – Netflix

மார்ட்டின் வூட் இயக்கத்தில் அலெக்ஸாண்ட்ரா ப்ரெக்கென்ரிட்ஜ், மார்ட்டின் ஹென்டர்சன், டிம் மேத்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Virgin River’. காதல், திரில்லர் கலந்த இந்த வெப்சீரிஸின் சீசன் 5, பார்ட் 1 செப்டம்பர் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அழகிய ஆற்றின் கரையில் வாழும் மெல் மற்றும் ஜாக் இருவரின் வாழ்க்கை, காதல், பிரிவு, சோகம் உள்ளிட்டவற்றை கதைக்களமாகக் கொண்ட வெப்சீரிஸ் இது.
Spy Ops (English) – Netflix

பல நாடுகளில் ஸ்பையாக வேலைசெய்யும் ராணுவ வீரர்களைப் பற்றிய ஆவணத்தொடர் இது. அவர்களின் பணிகள் எவ்வளவு சவால்களாலும், போராட்டங்களாலும் நிறைந்தது என்பதைச் சொல்லும் வெப்சீரிஸ் இது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இது செப்டம்பர் 7ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Burning Body (ஸ்பேனிஷ்) – Netflix

ஜார்ஜ் டோரெக்ரோசா இயக்கத்தில் உர்சுலா கார்பெரோ, பெப் டோசர் மற்றும் குயிம் குயிடிரெஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பேனிஷ் மொழி வெப்சீரிஸ் இது. ஒரு காவல் அதிகாரியின் உடல் காரில் வைத்து கொலை செய்து எரிப்படுகிறது. இந்தக் கொலைக்குக் காரணமாக ஒரு காதல் ஜோடி இருக்கலாம் என்று கதாநாயகியையும், கதாநாயகனையும் சந்தேகிக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது, இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.
தியேட்டர் டு ஓடிடி
ஜெயிலர் (தமிழ்) – Amazon Prime Video
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. திரையரங்கில் வெளியாகி பெரும் வசூலை செய்த காமெடி, ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மகனின் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கச் செல்லும் முன்னாள் ஜெயிலரான ரஜினி, தன் மகன் பற்றிய உண்மையையும், சிலைக்கடத்தல் கும்பலையும் எப்படி எதிர்கொண்டார் என்பதே இதன் கதைக்களம்.
Love (தமிழ்) – Aha Tamil

ஆர்.பி.பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘Aha Tamil’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பரத், வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். இதில் வாணி போஜனின் தந்தை ராதா ரவிக்கு உடபாடில்லை. பரத் மீது அவருக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு பரத், வாணி போஜன் இருவருக்குமிடையே அடிக்கடி சந்தேகங்களும் சண்டைகளும் வந்த வண்ணமிருக்கின்றன. ஒரு கட்டத்தில் சண்டையில் வாணி போஜன் கொல்லப்படுகிறார். வாணி போஜனின் மரணத்திற்குப் பின் இருக்கும் மர்மங்கள் என்ன, பரத்தின் நிலைமை என்ன என்பதுதான் இதன் கதைக்களம்.
The Little Mermaid (ஆங்கிலம்) – Disney+ Hotstar

நடுக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் நிலத்தில் இளவரசனாக இருக்கும் கதாநாயகன் கடலில் மூழ்கிவிடுகிறான். அவனைக் காப்பாற்றும் கடல் இளவரசி காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் தன் காதல் இளவரசனைத் தேடிக் கடலை விட்டு நிலத்திற்குச் செல்கிறார் கடல் இளவரசி. இருவரின் காதலை அவர்கள் வீட்டார் ஏற்றுக் கொண்டார்களா, கடலில் வாழும் இளவரசியும், நிலத்தில் வாழும் இளவரசனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.
டிஸ்னி தயாரிப்பில் ராப் மார்ஷல் இயக்கத்தில் ஹாலே பெய்லி, ஜோனா ஹாயர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.