வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரோம்: சீன அதிபரின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி(belt and Road Initiative) திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பெல்ட் அண்ட் ரோடு முன் முயற்சி திட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலி இணைந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே, சீன பிரதமர் லி கெகியாங்கை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்து பேசினார். அப்போது அவர், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்துள்ளதாக தெரிவித்ததாகவும், அதேநேரத்தில் சீனாவுடன் நட்புறவை தொடர விரும்புவதாகவும், விரைவில் சீனாவிற்கு வர உள்ளதாகவும் மெலோனி கூறியதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
வர்த்தக ரீதியிலான உறவுகள் பாதிக்கப்படும் என்பதால், இந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னர் ஜார்ஜியா மெலோனி நீண்ட ஆலோசனை நடத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த திட்டத்தில் இத்தாலி இணைந்ததை தொடர்ந்து, அமெரிக்காவுடனான அந்நாட்டு உறவில் பிரச்னை ஏற்பட்டது. இதனை சரி செய்யவே, விலக இத்தாலி முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன்னரும், பெல்ட் அண்ட் ரோடு முன்மாதிரி திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முன் வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இத்தாலி பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டிற்கான இத்தாலி தூதர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement