திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை கடந்த 2018 ம் ஆண்டு இறந்தது. 1995 ம் ஆண்டு 7 வயது குட்டியாக அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் அன்பைப் பெற்றது. இதனையடுத்து மறைந்த யானை ருக்குவுக்கு ராஜகோபுரம் அதனை அடக்கம் செய்த வடஒத்தவாடை தெருவில் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் […]