டில்லி ஆய்வு ஒன்றின் மூலம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40% பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளன. தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. கடைசியாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், தங்கள் மீதான வழக்குகள், சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கூறியிருந்தனர். இவற்றை ஆய்வு செய்த மேற்கண்ட அமைப்புகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், ”மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை […]
