’லவ் யூ விராட் கோலி’ பாகிஸ்தான் ரசிகர்கள் காட்டும் எல்லை கடந்த அன்பு

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கும். மைதானத்திலும், ஆன்லைனிலும் ரசிகர்களின் ஆக்ரோஷத்தை உட்சபட்சமாக பார்க்கலாம். இந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கிரிக்கெட் போட்டியை வெறுப்புணர்வோடு பார்த்த காலம் கடந்து, உணர்ச்சியின் அடிப்படையில் இல்லாமல் ஒரு விளையாட்டாக பார்க்கும் காலம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளின்போது இரு நாட்டு ரசிகர்களும் சகோதரத்துவத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களை அதிகமாக பார்க்க முடிகிறது. குறிப்பாக, பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மட்டும் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

அவர் விளையாட்டு மீது இருக்கும் ஈர்ப்பைக் கடந்து விராட் கோலி பாகிஸ்தான் பிளேயர்களிடம் காட்டும் அன்பும் மரியாதையும் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் முதன்முறையாக உலக கோப்பையில் தோல்வியை தழுவியபோது, ஒரு கேப்டனாக அவர் பெரும் விமர்சனத்துக்குள்ளானார். அப்போது, அவருடைய கேப்டன் பொறுப்பை பறிக்க வேண்டும் என்ற குரல்கள் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்தது எழுந்தது. இந்த கசப்பான தருணத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி வீரர்களை விராட் கோலி இன்முகத்துடன் வாழ்த்திய புகைப்படமும் சமூகவலைதளங்களில் சேர்ந்தே வைரலானது. 

 (@TheRealPCB) September 1, 2023

அந்த சிரிப்பு தான் விராட் கோலி மீது பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பை பொழிய காரணமாகவும் அமைந்து. அந்த போட்டிக்குப் பிறகு மீண்டும் மோதிய கிரிக்கெட் போட்டிகளின்போதும் விராட் கோலி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களிடம் ஜாலியாக பேசும் வீடியோ, அதில் அவர்களை மிகவும் கன்னியமாக நடத்தும் விதம் அவர் மீதான மதிப்பை பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் உயர வைத்தது. இதனை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியபோது கண்கூடாக பார்க்க முடிந்தது. புர்கா அணிந்திருந்த பெண் ரசிகை ஒருவர் தான் வைத்திருந்த பதாகையில் ‘ வி லவ்யூ விராட் கோலி, நான் உங்களுக்காக தான் இங்கு வந்திருக்கிறேன்” என எழுதியிருந்தார். 

@AdityaRajKaul) September 4, 2022

விராட் கோலியை பற்றி உங்களுடைய கருத்து என்ன? என பாகிஸ்தான் ரசிகர் ஒருவரிடம் கேட்டபோது, ” நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். விராட் கோலியை மிகவும் எங்களுக்கு பிடிக்கும். கிரிக்கெட்டைக் கடந்து அவர் எங்கள் நாட்டு அணி வீரர்களிடம் மிகவும் கன்னியமாகவும், மதிப்பாகவும் நடந்து கொள்கிறார். அதனால் அவரை எங்களுக்கு பிடிக்கிறது” என தெரிவித்தார். 

September 3, 2023

இன்னொரு ரசிகர் பேசும்போது, ” விராட் கோலி எங்கள் பிளேயர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறார். அவரின் நடத்தை எங்களை ஈர்க்கிறது” என தெரிவித்துள்ளார். ” விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறியவுடன் விராட் கோலியிடம் நீங்கள் எந்த ஆக்ரோஷத்தையும் பார்க்க முடியாது, மாறாக அவருடைய இயல்பான குணத்தில் பார்க்கலாம். அப்போது அன்பை பொழிகிறார்” என தெரிவித்தார். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய கொழும்பின் பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் விராட் கோலியின் புகைப்படத்தை வைத்ததிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. இப்படி எல்லை கடந்தும் நேசிக்கும் வீரராக இருக்கும் விராட் கோலிக்கு இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும்  என பாகிஸ்தான் ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.