பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு நாளும் போக மாட்டேன் : ரேகா நாயர்

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் ரேகா நாயர். இவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில், மாகாபா ஆனந்த், ரோஷினி, நடிகை ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நவீனா என பலரது பெயருடன் ரேகா நாயரின் பெயரும் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ரேகா நாயரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னை காட்டுப்பகுதிக்குள் போய் இருக்க சொன்னாலும் கூட இருப்பேன், ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டும் ஒரு நாளும் போக மாட்டேன். இப்படி நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் போய் இருப்பதற்கு பதிலாக 100 மரங்களை நடலாம் என்று கூறி இருக்கும் ரேகா நாயர், கடந்த மூன்று பிக் பாஸ் சீசன்களின்போதும் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக இப்படிதான் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் துளியும் ஆர்வமில்லை என்று கூறி இருக்கிறார் ரேகா நாயர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.