மூணாறு:கேரள
மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, பலத்த பாதுகாப்பு
வளையத்திற்கு உட்பட்டது என்ற போதும், ஜூலை 22ல், அதை ஒட்டிய செருதோணி
அணையில் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
அவர், ஹைமாஸ் லைட் டைமர்,
எர்த் வயர் ஆகியவற்றை இணைத்து, பூட்டுகளை கொண்டு பூட்டியதுடன்,
ஷட்டரை திறக்க பயன்படுத்தப்படும் இரும்பு வடத்தில், ஒரு வித
திரவத்தை
ஊற்றினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,
பாதுகாப்பு குளறுபடியால், அந்த நபர், அணையில் அத்துமீறியது
உறுதி
செய்யப்பட்டதால், சம்பவத்தன்று பணியில் இருந்த இடுக்கி
ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த போலீசார் ராஜன், பினோஜ், அப்துல்கபூர்,
சுரேந்திரன், அஜேஷ், மனு ஆகியோரை இடுக்கி எஸ்.பி. குரியாகோஸ்
சஸ்பெண்ட் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement