பீஹாரில் ஊடுருவல் அதிகரிக்கும் அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை| Minister Amit Shah warns of increasing infiltration in Bihar

ஜான்ஜர்பூர் : ”மத்தியில் மோடி மீண்டும் பிரதமராகாவிட்டால், பீஹார், ஊடுருவல்காரர் களின் கூடாரமாக மாறி விடும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ார்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ள ஜான்ஜர்பூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும்,
மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் அரசு பள்ளிகளில் விடுமுறை குறைப்பு போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக ஓட்டு வங்கி அரசியல் நடத்துகின்றனர்.
லாலு – நிதீஷ் ஜோடி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வராவிட்டால், பீஹார், ஊடுருவல்காரர்களின் கூடாரமாக
மாறிவிடும்.இதனால், மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழும். காங்., தலைமையிலான இண்டியா கூட்டணியில், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல்களுக்கு சொந்தக்காரர்கள்
நிறைந்துள்ளனர். ஊழலில் திளைத்த லாலுவுடன் கூட்டணி வைத்துள்ள நிதீஷ், பிரதமர் ஆசைக்காக கண்களை மூடிக்கொண்டுள்ளார். ஆனால், பிரதமர் பதவி காலியாக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.