வேலூர் நாளை முதல்வர் வருவதால் வேலூரில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை வேலூரில் தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இதற்காகப் பிரமாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து இன்று ரெயில் […]
