யூஜின் டைமண்ட் லீக் போட்டி : நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி| Eugene Diamond League 2023: Silver for Neeraj Chopra

யூஜின்: டைமன் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீர்ஜ்சோப்ரா இரண்டாம் இடம் பெற்றார்.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தின் யூஜின் சிட்டியில் இன்று (செப்.,17 )நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடந்தது. இதில் 83.80 மீ. தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.

முதல் இடத்தில் செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் தனது இறுதி முயற்சியில் 84.24மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆண்ட்ரியன் மார்டரே (81.79 மீ), கர்டிஸ் தாம்சன் (77.01 மீ), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (74.71 மீ) ஆகியோர் முறையே நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.

கடந்த ஆண்டு சூரிச்சில் டயமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தை நீரஜ் சோப்ரா தனது வென்ற 25 வயதில் வென்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றெடுத்தார்.

நடப்பாண்டு டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிந்த தூரம்:

தோஹா: 88.67 மீ

லொசேன்: 87.66 மீ

சூரிச்: 85.71 மீ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.