
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாகும் கவின்?
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது விஜய் சேதுபதி என்றும், அதையடுத்து துருவ் விக்ரம் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இப்போது டாடா படத்தைத் தொடர்ந்து தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அந்த வகையில் லைகா நிறுவனம், அனிருத், கவின் ஆகியோருடன் இணைந்து தனது முதல் படத்தில் கூட்டணி அமைக்க போகிறார் ஜோசன் சஞ்சய்.