IND vs BAN: தண்ணீர் கொண்டு ஜாலியாக மைதானத்துக்குள் ஓடி வந்த விராட் கோலி

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை லீக் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேச அணி 266 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் ஷகிப் அல்ஹசன் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் சிறப்பான வெற்றியை அந்த அணி பெற்றது. 

சிறப்பான பவுலிங்

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சிறப்பாகவே இருந்தது. ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தொடக்கத்தில் அந்த அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.  மிடில் ஆர்டரில் கேப்டன் ஷகிப் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடியதால் ஓரளவுக்கு சவாலான ஸ்கோரை வங்கதேச அணியால் எட்ட முடிந்தது. இருப்பினும், இந்திய அணியின் பேட்டிங்கை பார்த்தபோது எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணி தோல்வி

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் எதிர்பார்த்தளவுக்கு சிறப்பாக இருக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சீரான இடைவெளியில் தங்களின் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர். இதனால், வெறும் 6 ரன்களில் இந்திய அணி தோல்வியை நழுவ நேரிட்டது. 

விராட் கோலி வாட்டர் பாய்

 (@gaurav5pandey) September 15, 2023

இது இந்திய அணிக்கு மோசமான செய்தியாக இருந்தாலும், இந்த போட்டிக்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய 5 வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. விராட் கோலி, பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இப்போட்டியில் விளையாடவில்லை. அவர்கள் சக வீரர்களாக கேலரியில் இருந்து போட்டியை கண்டுகளித்தனர். அப்போது விராட் கோலி ஓவர்களுக்கு இடையே மைதானத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து பிளேயர்களுக்கு கொடுத்தார். அவரின் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஜாம்பவானாக இருக்கும் அவர் மைதானத்திற்கு வாட்டர் பாயாக வந்தது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.