விவோ விநாயக சதுர்த்தி சலுகை: இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8,500 வரை தள்ளுபடி

விநாயக சதுர்த்தி விற்பனை:

நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து, அதுவும் நல்ல மாடலாக இருக்க வேண்டும், தள்ளுபடியில் கொஞ்சம் கூடுதல் சலுகை கிடைக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்த்து இருந்தால், இப்போது சரியான நேரம். இவையனைத்தும் ஒரே நேரத்தில் உங்களுக்கு கூடி வந்தருக்கிறது. இந்த சலுகையை அறிவித்திருப்பது விவோ. விவோ இந்தியா விநாயகர் சதூர்த்தியையொட்டி அதன் பயனர்களுக்கு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. விவோ நிறுவனம் இந்த சிறப்புச் சலுகையை X-ல் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

8,500 வரை கேஷ்பேக்

Vivo இப்போது அதன் புதிய Vivo V29e, Vivo X90 தொடர் மற்றும் Vivo Y56 ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.8,500 வரை சிறப்பு கேஷ்பேக்கை வழங்குகிறது. இந்தச் சலுகை 30 செப்டம்பர் 2023 வரை செல்லுபடியாகும். Vivoவின் இந்த சலுகை Vivo இ-ஸ்டோர், இ-காமர்ஸ் தளம் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும்.

Vivo V29e, Vivo X90 தொடர் மற்றும் Vivo Y56 விலை

இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இது காஸ்டிலியான மொபைல். அதில் தான் இப்போது 8500 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  Vivo V29e இன் 8GB + 128GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.26,999 மற்றும் 8GB + 256GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.28,999. Vivo X90 பற்றி பேசுகையில், அதன் 8GB ரேம் + 256GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.59,999. போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.63,999. விவோ தொலைபேசியின் முதன்மையான கருப்பு வண்ண மாறுபாட்டின் விலை ரூ.84,999. இந்தியாவில் Vivo Y56 5G ஆரம்ப விலை ரூ.18,999.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.