மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது மகனுடன் வீட்டின் முன்னே வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளனர். இம்பால் அருகே உள்ள மணிப்பூரின் லீமாகாங் ராணுவ முகாமில் பணிபுரியும் செர்டோ தாங்தாங் கோம் விடுமுறையில் இம்பாலில் உள்ள தாருங் பகுதியில் உள்ள […]
