மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் யானை தாக்கியதில், வனத்துறை டிரைவர் உயிரிழந்தார். அந்த மாவட்டத்தில் உள்ள பலஸ்கோவான் வனப்பகுதிக்குள் புதிதாக காட்டு யானை ஒன்று நுழைந்துள்ளதாக கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் காரில் அப்பகுதிக்கு சென்றனர். காரை சுதாகர் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது யானையை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை கார் ஓரத்தில் இருந்து சுதாகர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். காட்டு யானை அவரை நோக்கி திரும்பியது. அப்போது, சுதாகர் தப்பி செல்ல முயன்ற போது தடுமாறி கீழே விழுந்தார். யானை அவரை அதே இடத்தில் தாக்கி கொன்றுவிட்டு சென்றது. அவரது உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement