பழனி: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி. இங்குள்ள முருகனை தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசித்திது வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்பட முருகனுக்கு உகந்த நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. […]
