ராகு-கேது தோஷங்கள் தீர்க்கும் சில எளிய பரிகாரங்கள்… வழிபாடுகள்!

  • ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். ஒருவரின் ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் சாதகமாக இல்லை என்றாலோ, தோஷம் தரும் நிலை யில் அமர்ந்திருந்தாலோ வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

  • ஒன்றைரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் இந்தக் கிரகங்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப 12 ராசிக்காரர்களுக்கும் உரிய பலன் களை வழங்குகிறார்கள். இந்தக் கிரகங்களின் நிலை சாதகமாக இல்லை எனில் சுபகாரியத் தடை, வீண் வம்பு வழக்குகள், தேவையற்ற அவச்சொல்லுக்கு ஆளாகுதல், வறுமை, கடன் தொல்லை ஆகியவை ஏற்படும்.

  • எனினும் `சர்ப்பக் கிரகங்கள் சாதகமாக இல்லையே’ என்று கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே சில எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் ராகு கேது தோஷங்கள் நீங்கப்பெறலாம் என்று வழிகாட்டுகின்றன சாஸ்திரங்கள்.

  • வீட்டில் வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் உள்ள இடங்களில் பறவைகளுக்கு தானியங்களும் பருக சிறிது நீரும் வைத்து வந்தால் ராகு கேது தோஷங்கள் விலகுவதோடு பட்சி தோஷமும் விலகும்.

  • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புற்று உள்ள கோயில்களுக்குச் சென்று அங்கிருக்கும் புற்றுக்கு பூக்களை சாத்தி, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, நெய் தீபம் ஏற்றி ஒன்பது முறை வலம் வந்து வணங்கி வருவது மிகச்சிறந்த பரிகாரமாகும்.

  • தினமும் கோளறுபதிகம் பாராயணம் செய்து வந்தால், ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷங்கள் விலகி ஓடும்.

  • ஹோம திரவியங்கள், தூபப் பொருள்கள், கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் போர்வைகள், சீயக்காய் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தானம் செய்வது, சிறந்த பரிகாரம் எனலாம்.

  • ஜாதகத்தில் கேது சாதகமில்லாமல் இருந்து, அனைத்து விஷயங்களிலும் மந்த நிலையைக் கொடுத்துக் கொண்டிருந்தால், வெள்ளை மற்றும் கறுப்பு நிற ஆடைகள், கம்பளிப் போர்வைகள், நெல்லிக்காய், மாங்காய், ஊறுகாய் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்குத் தானம் செய்ய வேண்டும். தெரு நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் பால் அன்னம் கொடுத்துவர தோஷங்கள் படிப்படியாகக் குறையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

  • கல்லில் நாகர் சிலைகளை வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, 40 நாள்கள் விளக்கேற்றி வலம் வந்து வழிபட்டால் ராகு – கேது தோஷம் நிவர்த்தியாகும்.

  • ஆலயங்களுக்குச் சென்று அம்மன், துர்கை, சரபேஸ்வரர் ஆகியோரை வழிபாடு செய்து வந்தால் நற்பலன் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவது நல்லது.

  • ராகு காலத்தில் ஆலயம் சென்று ராகு பகவானுக்கும் ஈசனுக்கும் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். உளுந் தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத் தியம் செய்வது நல்லது. ராகு காலத்தில் ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்துவர ராகு தோஷம் நீங்கும்.

  • திங்கள் அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் பச்சரிசி மாவால் கோலம் போட்டு விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. கேதுவுக்குப் பலநிற மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர, கேதுவால் உண்டாகும் கெடுபலன்கள் விலகும். அதேபோல் கேதுவுக் குப் பிரியமான தட்டை, கொள்ளுப் பயிறு ஆகியவற்றைத் தானம் செய்வதும் நல்ல பரிகாரமாகும்.

  • வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு ராகு- கேது தோஷங்கள் நீங்க சிறந்தது.

  • `கோமேதகம், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரம் அணிவதும் ராகு – கேது தோஷத் தைத் தணிக்கும்’ என ரத்ன சாஸ்திரம் தொடர்பான நூல்கள் கூறுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.