விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டம்! |Photo Album

வெட்டி வேர் மணி மற்றும் சங்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள 43 அடி விநாயகர் சிலை.
இடம்: கொளத்தூர் பூம்புகார் நகர், சென்னை
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வேலூர் அடுத்த ரங்காபுரம் ஏரியூரில் கப்பல் விநாயகர்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வேலூர் கஸ்பாவில் ஊஞ்சல் விநாயகர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையை ஆய்வு செய்தார்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்கார தோற்றத்தில் அபிஷ்ட வரத விநாயகர்
விழுப்புரம் தேர் பிள்ளையார் கோவிலில் வெள்ளி சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார்
புரசைவாக்கம் பிரதான சாலையில், சந்திரயான் வடிவில் விநாயகர் சிலை வைத்துள்ள படம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி., காலனியில், மைசூர் பாகுவால் செய்யப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர்
சென்னை வளசரவாக்கம் சிவன் கோயில் அருகில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் விநாயகர்
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு ராசா சுவாமி நல்ல மங்கை அம்மன் கோவிலில் உள்ள கன்னிமூல கணபதி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஈரோடு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி10அடி உயரம் உள்ள வீரவிநாயகர்சிலையைவைத்து சம்பத்நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ‘சந்திரயான்-3’ மாடலில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.
இடம்: கொளத்தூர் இரட்டை ஏரி, சென்னை
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உலகக்கோப்பை வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி : 5000 மக்கா சோளம் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.
இடம்: மணலி புதுநகர் சென்னை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.