நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிற்கு விரைவில் தீர்வு வழங்ககூடிய பொறிமுறைகள் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, மேற்படி மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது.