புதுடில்லி: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், அந்நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில நடைமுறை சிக்கல் இருப்பதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement