புதுடில்லி, ”நாட்டின் தொழில் துறை மற்றும் தொழில்நுட்ப அமைப்பில், ‘சந்திரயான் – 3’ திட்டத்தின் வெற்றி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று, இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
‘இஸ்ரோ’வின், சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றியின் போது மட்டுமல்ல, சந்திரயான் – 2 தோல்வியின் போதும், விஞ்ஞானிகளுக்கு பக்கபலமாக, பிரதமர் மோடி இருந்தார். மத்திய அரசின் கொள்கை முடிவுகளால், விண்வெளித் துறையில் இளைஞர்களின் பங்கு அதிகரித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில், சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது, நாட்டின் தொழில் துறை மற்றும் தொழில்நுட்ப அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.மிகக் குறைந்த செலவில், சந்திரயான் – 3 திட்டம் வெற்றி அடைந்துள்ளது. விண்வெளித் துறையில் நம் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement