முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான குழுக் கலந்துரையாடல் நேற்று (20) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்.திரு.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இயற்கையோடு இணைந்த மிக அழகான பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்டம் சிறந்து விளங்குகின்ற போதும் சுற்றுலா துறை சார்ந்த விடையங்களில் பின்தங்கி காணப்படுவதனால் உல்லாச பிரயாணிகளை அதிகம் வரவழைப்பதற்காக சிறந்த சுற்றுலா மையங்களினை தெரிவு செய்து அவற்றை எவ்வாறான முறையில் அபிவிருத்தி செய்யமுடியும் என்பது தொடர்பாக குழுவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகள், உதவி பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராமசேவகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.