
விஜய்யுடன் இணையும் அரவிந்த்சாமி
நடிகர் அரவிந்த்சாமி 90ஸ் காலகட்டத்தில் ரோஜா, பாம்பே, மின்சார கனவு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர். அதன் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தனி ஒருவன் படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து தற்போது கதாநாயகனாக, குணச்சித்திர நடிகர், வில்லன் ஆகிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது வில்லன் கதாபாத்திரமா என்பது குறித்து தெரியவில்லை. ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.