காலிஸ்தான் பயங்கரவாதி கொலை குறித்த தகவல் இந்தியாவிடம் பகிர்வு: கனடா பிரதமர்| Intelligence On Terrorists Murder Shared With India Weeks Ago: Trudeau

ஒட்டாவா: ‛‛ கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்கள் பங்கு இருப்பது குறித்த தகவல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

ஒட்டாவா நகரில் ஜஸ்டின் ட்ரூடோ நிருபர்களிடம் கூறியதாவது: நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்பே பகிர்ந்து கொண்டோம். திங்கட்கிழமை வெளிப்படையாக இந்திய அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டை நான் முன்வைத்தேன். ஆனால், ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவிடம் பகிர்ந்து விட்டோம்.

இந்தியாவுடன் இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போது தான் இவ்விஷயத்தில் அடி ஆழத்தை அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.