மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம் விமான தளத்தில் விமான படை ஹெலிகாப்டர் தரையிறக்கி ஆய்வு நடந்தது.
சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் விமான பயிற்சி பெற விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்தனர்.
விமானம் தரையிறங்க சோதனை ஓட்டம் இரண்டு முறை நடத்தப்பட்டு தோல்வியுற்ற நிலையில் இறுதியில் 2022 டிசம்பரில் வெற்றி பெற்றது.
தேசிய மாணவர் படையின் இரண்டு இருக்கைகளை கொண்ட வைரஸ் எஸ்.டபிள்யூ., 80 ரக விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில் பேரிடர் காலங்களில் இந்த விமான தளத்தை பயன்படுத்தும் வகையில் விமானபடைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்டு ஆய்வு நடந்தது.
கோயம்புத்தூர் சூலூரில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சத்திரம் விமான தளத்தில் தரையிறங்கியது. முன்னதாக விமான தளத்தை மூன்று முறை வட்டமடித்தும் கண்காணித்தது.
ஓடு தளத்தில் உள்ள சில குறைபாடுகளை சீரமைக்க வலியுறுத்தப்பட்டதாக ஆய்வு குழுவின் தலைமை கமாண்டிங் அதிகாரி ஸ்ரீனிவாசஅய்யர் கூறினார்.
சீரமைக்கப்படாத ஓடுதளம்
2022 ஜூலையில் பெய்த மழையில் ஓடு தளத்தின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அதனை இதுவரை சீரமைக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement