
ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . இதில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரம் பகுதியில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இதில் ரஜினி கன்னியாகுமரி பகுதி வட்டார வழக்கில் பேசி நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.