டில்லி மக்களவையில் அநாகரீகமாகப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் சபாநாயகரை வலியுறுத்தி உள்ளன. மக்களவையில் சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். டேனிஷ் அலிக்கு எதிராக பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். ரமேஷ் பிதூரி அநாகரீகமாக சில வார்த்தைகள் பேசியது தொடர்பாக கட்சித் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிதூரி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத்சிங், அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுமாறு சபாநாயகருக்குக் கோரிக்கை […]