சூர்யா நடிப்பில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.

சமீபத்தில் வெளியான இதன் கிளிம்ஸ் வீடியோவில் போர்க்களத்தில் சூர்யாவின் ஆஜானுபாகுவான தோற்றம் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்தின் அடுத்த அப்டேட்டிற்காகவும், வெளியீட்டிற்காகவும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய ஐந்து சுவாரஸ்யமான சீக்ரெட்டைப் பார்ப்போம்.

* ‘கங்குவா’வில் நாம் கிளிம்ஸ் வீடியோவில் பார்த்த பீரியட் போர்ஷன் ஒரு சிறிய போர்ஷன்தான். இதை 3டி-யில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். நிகழ்கால போர்ஷனில்தான் சூர்யா – திஷா பதானி காம்பினேஷன் இருக்கிறது. இதற்கான சூட்டிங் கோவா, சென்னை எண்ணூர், ஈ.வி.பி ஸ்டூடியோ, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடக்கின்றன.
*‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்’, ‘புஷ்பா’ என்று பிரமாண்ட படங்களுக்கு லேட்டஸ்ட் கேமராக்களை அனுப்பி வைத்த தாஹர் யூனிட்டில் இருந்து கேமராக்களை எடுத்துள்ளனர்.
*பீரியட் காலகட்ட போர்ஷன்கள் முழுவதையும் கொடைக்கானல், ராஜமுந்திரியில் உள்ள அடர்ந்த காடுகளிலேயே படமாக்கி யுள்ளனர். லைட்டிங் வைக்காமல், காடுகளின் இயற்கையான வெளிச்சத்திலேயே காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் இதைக் கூடுதல் சிறப்பாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

*பீரியட் காலகட்ட போர்ஷன்களில் சூர்யாவின் மேக்கப்பிற்கே இரண்டரை மணி நேரத்திற்கு மேல் எடுத்துள்ளதாம். காலை ஏழு மணி ஷாட்டிற்கு மேக்கப்புடன் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சூர்யா உட்பட மொத்த டீமும் ரெடியாகி, அத்தனை பேரும் காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்தே சென்று வந்துள்ளனர்.
*‘கங்குவா’ அறிமுக வீடியோவிலேயே அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பலவிதமான கதாபாத்திரங்கள் உள்ளன என அறிவித்தனர். அதைத் தாண்டியும் சர்ப்ரைஸாக சில தோற்றங்கள் சூர்யாவிற்கு இருக்கின்றன.
‘கங்குவா’ பற்றிய இன்னும் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்து படியுங்கள்