வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே, கதகளி நடன மேதைகளின் களிமண் சிலைகளை சதனம் ஹரிகுமார் வடிவமைத்துள்ளார்.
கேரள
மாநிலம், பாலக்காடு மாவட்டம், பத்திரிப்பாலை பேரூரை சேர்ந்தவர் சதனம்
ஹரிகுமார், 65. கதகளி நடன கலைஞரான இவர், நடன பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கை வண்ணத்தில், மறைந்த கதகளி நடன மேதைகளின் களிமண் சிலைகளை மக்கள் மனதை ஈர்க்கும் வகையில் தயாரித்து வருகிறார்.
கதகளி
நடன மேதைகளான, பட்டிக்காம்தொடி ராவுண்ணி, கலாமண்டலம் பத்மநாபன் நாயர், கலா
மண்டலம் ராமன்குட்டி நாயர், தெக்கன்காட்டில் ராமனுண்ணி நாயர் ஆகியோரின்
சிலைகளை, களிமண்ணில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
சமீபத்தில் இவர்
வடிவமைத்த கதகளி நடன மேதைகளான கலாமண்டலம் பத்மநாபன் நாயர், வெள்ளிநேழி நாணு
நாயர் ஆகியோரின் களிமண் சிலை திறப்பு விழா, இன்று (28ம் தேதி) நடக்கிறது.
விழாவை,
உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைக்கிறார். இசைக்
கலைஞர் மண்ணுார் ராஜகுமாரனுண்ணி தலைமை வகிக்கிறார். கதகளி நடன மேதை கலா
மண்டலம் கோபி ஆசான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
சதனம் ஹரிகுமார் கூறியதாவது:
களிமண்
உருவச்சிலை தயாரிப்பது என் பொழுதுபோக்கு. 1989ல் மேற்கு வங்கம்
பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, சாந்தி நிகேதனில் நடன ஆசிரியராக பணி புரியும்
போது களிமண் சிலை தயாரிக்க கற்றுக் கொண்டேன்.
திருவில்வாமலை
வென்கிச்ச சுவாமி, முண்டாய கிருஷ்ண பாகவதர், நடன விநாயகர், சிவதாண்டவம்,
நவரசம் கொண்ட குரங்குகள், சூர்ப்பனகை என, நுாற்றுக்கும் மேலான களிமண்
சிலைகளை தயாரித்துள்ளேன். மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கல்பாத்தி
சி.எஸ்.கிருஷ்ண ஐயரின் உருவச் சிலையை ஏற்கனவே வடிவமைத்துள்ளேன்.
ஒரு
சிலை தயாரிக்க 25 நாட்களாகும். கலை மேதைகளின் உருவ சிலைகள் தயாரிப்பதில்
ஒரு ஆத்ம சமர்ப்பணம் தேவை. அப்போது தான், உயிரோட்டமுடன் சிலைகளை தயாரிக்க
முடியும். 2019 – 20ல், சிறந்த களி மண் சிலைக்கான மாநில விருது பெற்றேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement