Joe Biden: 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரிகளைக் கடித்த பைடனின் வளர்ப்பு நாய்!

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான `கமாண்டர்’ 11-வது முறையாக பாதுகாப்பு அதிகாரியைக் கடித்திருக்கிறது.

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.

ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது.

வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்’ (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்’ ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது.

பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார். 

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தகவல் தொடர்பு இயக்குநரான எலிஸபெத் அலெக்சாண்டர் கூறுகையில், “செல்லப்பிராணிகளுக்கு மன அழுத்தமான சூழல் உள்ள இடமாக வெள்ளை மாளிகை உள்ளது. வளர்ப்பு நாயான கமாண்டர் 2022 அக்டோபர் முதல் ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் 10 அதிகாரிகளைக் கடித்திருக்கிறது. 

வெள்ளை மாளிகை

2021-ல் பைடனின் சகோதரர் ஜேம்ஸ், கமாண்டரை பைடனுக்கு பரிசாகக் கொடுத்தார். பைடனின் குடும்பத்தில் `வில்லோ’ என்ற பூனையும் இருக்கிறது.

வெள்ளை மாளிகை ஊழியர்களைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் பைடனின் இரண்டாவது வளர்ப்பு நாய் கமாண்டர். இதே போல அதிகாரிகளைக் கடித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட `மேஜர்’ என்ற ஜெர்மன் ஷெப்பர்டு நாய் நண்பர்களுடன் டெலாவேரில் வாழ அனுப்பி வைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.