சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. முன்னதாக ஜெயிலர் படத்தின் FDFS ஷோவுக்கு அனுமதி கிடைக்காததால் ரஜினி டென்ஷன் ஆனதாக சொல்லப்பட்டது. அதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார்.