ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர் இஷான் கிஷான் நீக்கப்பட்டு சுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி, அஷ்வின் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் அணி 42.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. கேப்டன் பாபர் ஆசம் (50), முகமது ரிஸ்வான் (49), இமாம்-உல்-ஹக் (36), அப்துல்லா ஷபிக் (20) ஓரளவு கைகொடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2, விக்கெட் கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement