வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இன்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இது உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என வாழ்த்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement