12GB, 8GB ஸ்மார்ட்போன்கள் அதிரடி தள்ளுபடியில்… எஸ்பிஐ கார்ட் இருந்தா கூடுதல் கிப்ட்!

Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்ற தள்ளுபடி விற்பனை கடந்த அக். 8ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு பொருள்கள் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் அதிரடி தள்ளுபடிகள் உள்ளன. 

அந்த வகையில், Vivo நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன iQOO மொபைல்களும் இந்த அமேசான் விற்பனையில் பம்பர் தள்ளுபடியைப் பெறுகிறது. iQOO பிராண்டில் பல வகையான இடைப்பட்ட மற்றும் பிரீமியம் விலை போன்களில் கிடைக்கிறது.

தற்போது, இந்த அமேசான் தள்ளுபடி விற்பனையில், iQOO நிறுவனத்தின் பல சிறந்த ஸ்மார்ட்போன்களை மலிவான விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் iQOO மொபைல்களை இதில் காணலாம்.

iQOO Neo 7 Pro 5G

இந்த மொபைலில் Snapdragon 8+ ஜெனரல் 1 பிராஸஸர் 12GB ரேம் மற்றும் 256GB வரை இன்டர்நெல் மெமரி கொண்டுள்ளது. இது 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் Funtouch OS 13இல் இயங்குகிறது. இது 120W FlashCharge ஆதரவுடன் கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது. அமேசானில் ஆரம்ப விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆகும். எஸ்பிஐ கார்டுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி உண்டு.

iQOO Z6 Lite 5G

இந்த ஃபோன் 6GB RAM உடன் 128GB இன்டர்நெல் மெமரியுடன் கொண்டுள்ளது. இந்த போன் Snapdragon 4 Gen 1 செயலியுடன் வருகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மொபைலில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 12 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ கார்டுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி உண்டு.

iQOO Z7 Pro 5G

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் வளைந்த சூப்பர் விஷன் டிஸ்ப்ளே உள்ளது. குறிப்பாக, இந்த மொபைலில் 64MP பிரதான கேமரா மற்றும் 66W Flashcharge ஆதரவுடன் 4600mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 8GB RAM உடன் 128GB இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimension 7200 5G செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாகும். ரூ.1000 தள்ளுபடியுடன் 22 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.

iQOO Z7s 5G

இந்த 5G மொபைலில் 8GB வரை RAM மற்றும் 128GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போனில் Snapdragon 695 5G செயலி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6.38 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. கைபேசியில் 64MP பிரதான கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. எஸ்பிஐ வங்கி கார்டுக்கு ரூ.1250 தள்ளுபடி உண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.