பாரிஸ்,-ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலகின் மிகப் பெரிய லுாவ்ரே அருங்காட்சியகம் உள்ளது.
இங்கு, இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உட்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான முக்கிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அருங்காட்சியகத்துக்கு ஆபத்து என எச்சரிக்கை செய்தி வந்ததை அடுத்து, நேற்று லுாவ்ரே அருங்காட்சியகம் மூடப்பட்டது. பார்வையாளர்களும், ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து அருங்காட்சியக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நாடு முழுதும் அவசர தாக்குதல் குறித்த எச்சரிக்கை நிலவும் சூழலில், மிரட்டல் வந்ததால் பார்வையாளர்களின் நலன் கருதி அருங்காட்சியகம் மூடப்பட்டது’ என்றார்.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போரில், இஸ்ரேலை பிரான்ஸ் ஆதரித்து வரும் சூழலில், நாடு முழுதும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement