வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியொங்யாங்: அமெரிக்கா அரசுக்கு ஆதரவான பத்திரிகை அமைப்புகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு வட கொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரமற்ற, பொய்யான வதந்தியைப் பரப்புகின்றனர் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ் படையினர் வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தார். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ் படையினர் வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசுக்கு ஆதரவான பத்திரிகை அமைப்புகள் மற்றும் அரைகுறை வல்லுநர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளனர்.அவர்கள் ஆதாரமற்ற, பொய்யான வதந்தியைப் பரப்புகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement