
கல்லூரி மாணவர் ஆக மாறும் சூர்யா
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா மற்றும் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கின்றார் என தகவல்கள் வெளியானது.
இந்த படம் கேங்ஸ்டர் கதை களத்தை கொண்ட படம் என தகவல்கள் வெளியானது. இப்போது இந்த படத்தில் பிரதான காட்சிகளில் சூர்யா கல்லூரி மாணவர் ஆக நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இதற்காக சூர்யா சற்று உடல் எடையை குறைக்கவும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.