
கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருவி பட நடிகை
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வியாபார பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது அருவி படத்தில் பிரபலமான நடிகை அதிதி பாலன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிப்பதை குறித்து படக்குழுவினர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகின்றனர்.