Apple Festive Sale 2023: ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர பண்டிகைக் கால விற்பனையை இந்தியாவில் இன்று முதல் (அக். 15), தொடங்கியுள்ளது. ஐபோன்கள், ஐபாட்கள், லேப்டாப்கள், ஏர்போட்கள் மற்றும் பல தயாரிப்புகளில் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளின் கீழ் நீங்கள் வாங்க முடியும்.
இந்த விற்பனையின் முக்கிய விஷயம் என்றால், ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதாகும். இதைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பல்வேறு சாதனங்களில் ரூ.10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் தற்போது ஐபோன் 15 Pro மற்றும் ஐபோன் 15 Pro Max மாடலில் 6 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 Plus மாடலில் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 Plus மாடலில் 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி பெறலாம். ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE (Third Generation) போன்ற பழைய மாடல் ஐபோன்களிலும் சிறப்புத் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
எக்ஸ்சேஞ் சேல்
இந்த தள்ளுபடி விற்பனையில் எக்ஸ்சேஜ் ஆஃபரும் கிடைக்கிறது மற்றும் உங்களின் எக்ஸ்சேஜ் சாதனத்தின் மதிப்பு மாடலை பொறுத்து மாறுபடலாம். எடுத்துக்காட்டாக, ஆப்பிள் நிறுவனத்தின் கடந்தாண்டு முதன்மையான ஐபோன் 14 Pro Max மொபைலுக்கு 67 ஆயிரத்து 800 ரூபாய் வரை வர்த்தக மதிப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் iPhone 13 மதிப்பு 38 ஆயிரத்து 200 ரூபாய் வரை வர்த்தக மதிப்பைப் பெறலாம்.
மேக்புக்கிலும் தள்ளுபடி
ஆப்பளின் நிறுவனத்தின் லேப்டாப்களான மேக்புக் Air M2 13 இன்ச் மற்றும் 15 இன்ச், மேக்புக் ப்ரோ 13 இன்ச், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மாடல்கள் மற்றும் மேக் ஸ்டுடியோ போன்ற பல்வேறு மேக்புக் மாடல்களும் விற்பனையில் உள்ளன. இந்த அனைத்து மேக்புக் மாடல்களிலும், ஹெச்டிஎஃப்சி வங்கிக் கிரெடிட்டைப் பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் தள்ளுபடியைப் பெறலாம்.
கட்டணமில்லா EMI
இதேபோல், வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஹோம் பாட் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுடன் 2 ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடியுடன் வாங்கலாம். இதனுடன், இந்த சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 6 மாத ஆப்பிள் மியூசிக் சந்தாவும் கிடைக்கும். கடைசியாக, ஆப்பிள் அனைத்து பொருள்களுக்கும் ஆறு மாதங்கள் வரை கட்டணமில்லா மாதத் தவணை ஆப்ஷனை வழங்குவது முக்கியம். மேலும் தகவலுக்கு ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.