கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பற்ற முறையில் நீதியாக தீர்த்து வைக்கப்படும் என்று காக்கைதீவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காக்கைதீவு மற்றும் சாவற்காட்டு கடல் தொழிலாளர்களுக்கு இடையே தொடர்ச்சிய படகு கட்டும் இறங்குதுறை மற்றும் இரண்டு சங்க கடல் தொழிலாளர்களுக்கு இடையே கடலுணவுகள் கூறுவிலை கோரல் விடயத்தில் ஏற்படும் பிணக்கால் சந்தையை பிரிப்பது போன்ற பிரைச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு குறித்த சங்கங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காக்கைதீவுக்கு நேரில் இன்று மாலை விஜயம் செய்த வேளையே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்கள் தொடர்பாக திணைக்களம் சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர் குறித்த பகுதியில் அமைச்சரின் வருகையையால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் விடயங்களை சுமுகமான பேசி முடிவெடுக்கும் சூழ்நிலை அங்கு காணப்படாத நிலையில் இரண்டு தரப்பு கடல் தொழிலாளர் பிரதிநிதிகளையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அழைத்து பேசி இணக்கப்பட்டுடன் சுமுகமான முடிவு காண்பதென இன்றைய சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது.